×

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: 2022-23ம் ஆண்டிற்கான பொதுமாறுதல், பணிநிரவல் கலந்தாய்வுகள் கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரையிலான தேதிகளிலும், 2023-24ம் ஆண்டிற்கான பொதுமாறுதல், பணிநிரவல் கலந்தாய்வுகள் கடந்த ஆண்டு மே 8ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரையிலான தேதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2023-25ம் ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான பணிகளை மே மாதத்தில் தொடங்கி நடத்தி முடிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் மக்களவைத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நன்னடத்தை விதிகள் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் 2024-25ம் ஆண்டிற்கான பொதுமாறுதல், பணிநிரவல் கலந்தாய்வு, தொடர்பான ஆயத்தப்பணிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வரும் 13ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை தொடர்ந்து நடத்திட அனுமதியை வழங்குமாறு பள்ளி கல்வித்துறை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று நிபந்தனைகளை பின்பற்றி 2024-25ம் ஆண்டிற்கான பொதுமாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு தொடர்பான ஆயத்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும், வரும் 13ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை தொடர்ந்து நடத்திடவும், மேலும் பொதுமாறுதல், பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொண்டு மாறுதல், பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் பணிவிடுப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education ,Chennai ,Tamil Nadu Department of School Education ,School Education Department ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு...